Star14. மதுரை திவ்யதேசப் பயணம் - Part 2
எனது மற்ற நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்
****************
முந்தைய பதிவில் திருக்கோட்டியூர் பற்றி எழுதியிருந்தேன்.
திருமோகூர்
---------
திருமோகூர் என்கிற வைணவ திருப்பதி, மதுரையிலிருந்து 8 கிமீ தொலைவில், மதுரையிலிருந்து மேலூர் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. பிரம்மன், இந்திரன், அஜருதர் ஆகியோர் பெருமாளை வழிபட்ட புண்ணியத் தலமிது! தலபுராணம், திருப்பாற்கடலை கடைந்த சமயம், பெருமாள் மோகினி அவதாரமெடுத்து தேவர்களுக்கு அமுதம் கிடைக்கச் செய்த அருளிச்செயலுடன் தொடர்புடையது. அதனால், இத்தலம், மோகனஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. மதுரை மண்ணின் மைந்தர்கள், இக்கோயிலை, 'சக்கரத்தாழ்வார் கோயில்' என்று அழைக்கின்றனர்.
மூலவர் காளமேகப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில், வலது கையால் பக்தர்களுக்கு அருள் பாலித்து (வரத ஹஸ்தம்) இடக்கையில் கதாயுதம் ஏந்தி காட்சியளிக்கிறார். மழை தரும் கருமேகம் போல் பக்தகோடிகளுக்கு வரமளித்து அருளுவதால், காளமேகப் பெருமாள் என்ற காரணப் பெயர் பெற்றவர் இவர்! தீர்த்தம் ஷீராப்தி புஷ்கரிணி எனப்படுகிறது. விமானம் கேதகி (பலராமரின் இன்னொரு திருநாமம் கேதன்)விமானம் என்று அழைக்கப்படுகிறது.
உத்சவ மூர்த்தியான திருமோகூர் ஆப்தன் (நண்பன்) பஞ்ச ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார். அத்துடன், சயன திருக்கோலத்தில், திருவடி அருகில் ஸ்ரீதேவியும் பூதேவியும் அமர்ந்த நிலையில், ஆதிசேஷன் மேல் 'பள்ளி கொண்ட பெருமாளாக' தனிச்சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
கோயிலுக்குள் நிழைந்தவுடன் காணப்படும் மண்டபத்தில், இக்கோயிலை ஒரு காலத்தில் பராமரித்து வந்த சின்ன மருது, பெரிய மருது ஆகியோரின் (நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட) சிலைகளைக் காணலாம். அடுத்துள்ள கருட மண்டபத்தில், கோதண்டராமர், சீதாபிராட்டி, இலக்குவன், ரதி, மன்மதன் ஆகியோரின் அழகிய உருவச் சிலைகள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
தாயாரின் திருநாமம் மோகூர்வல்லி, மேகவல்லி மற்றும் மோகனவல்லி. தாயாருக்கு தனிச்சன்னதி உண்டு. இவர் 'படி தாண்டா பத்தினி' என்பதால், பெருமாளின் உத்சவத்தின்போது கூட இவர் வெளியே வருவதில்லை என்று கோயில் பட்டர் கூறினார். கல்யாண உத்சவத்தின்போது பெருமாளே தாயார் சன்னதிக்கு வந்து, அவரை மணம் புரிந்து கொள்கிறார்!
இங்குள்ள சக்கரத்தாழ்வார் சன்னதி விசேஷமானது. பெருமாளின் பஞ்சாயுதங்களில் ஒன்று தான் சுதர்சன சக்கரம். இங்குள்ள சுதர்சன ஆழ்வார் 16 திருக்கரங்களில் 16 வகை ஆயுதங்களுடன் காட்சியளிப்பது விசேஷமாகக் கருதப்படுகிறது. சுதர்சன ஆழ்வாரின் கோலத்தை ப்ரதியாலீத கோலம் என்று கூறுவர். அதாவது, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருளுவதற்காக ஓடி வருவது போல காட்சியளிக்கு திருக்கோலமாகும்! கோயிலில் சுதர்சன ஆழ்வார் செதுக்கப்பட்ட செப்புத்தகடு கிடைக்கிறது. அதை வீட்டில் வைத்து பூஜித்தால், சகல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை.
சக்கரத்தாழ்வாரின் பின்பக்கத்தில், நான்கு திருக்கரங்களுடன் யோகநரசிம்ம மூர்த்தியைக் காணலாம். இருகரங்களை துடை மேல் வைத்து, மற்ற இருகரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சியளிக்கும் நரசிம்மப் பெருமான், அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் தன்னை வழிபடும் அடியவர்க்குத் தர வல்லவர்! சக்கரத்தாழ்வார், நரசிம்மர் ஆகிய இருவருமே தீக்கதிர்களால் சூழப்பட்டது போல தோற்றமளிக்கின்றனர்.
வைகாசி மாதம் நடைபெறும் பிரம்மோத்சவத்தின்போது, மோகினி அவதாரம் நாடகமாக அரங்கேற்றப்படுகிறது.
இப்புண்ணியத் தலத்தை திருமங்கையாழ்வார் (சிறிய திருமடல்), நம்மாழ்வார் (திருவாய்மொழியில் 11 பாசுரங்கள்) மங்களாசாசனம் செய்துள்ளனர். திருவாய்மொழியிலிருந்து சில திருமோகூர் பாசுரங்கள் கீழே:
3785@
அன்றியாம் ஒரு புகலிடம்* இலம் என்றென்று அலற்றி*
நின்று நான்முகன் அரனொடு* தேவர்கள் நாட*
வென்று இம்மூவுலகளித்து உழல்வான்* திருமோகூர்*
நன்று நாம் இனி நணுகுதும்* நமதிடர் கெடவே. 10.1.3
3786@
இடர்கெட எம்மைப் போந்தளியாய்* என்றென்று ஏத்தி*
சுடர்கொள் சோதியைத்* தேவரும் முனிவரும் தொடர*
படர்கொள் பாம்பணைப்* பள்ளிகொள்வான் திருமோகூர்*
இடர் கெடவடி பரவுதும்* தொண்டீர். வம்மினே. 10.1.4
3790@
துயர்கெடும் கடிதடைந்து வந்து* அடியவர் தொழுமின்*
உயர்கொள் சோலை* ஒண்தட மணியொளி திருமோகூர்*
பெயர்கள் ஆயிரமுடைய* வல்லரக்கர் புக்கழுந்த*
தயரதன் பெற்ற* மரதக மணித் தடத்தினையே. 10.1.8
3791@
மணித் தடத்தடி மலர்க்கண்கள்* பவளச் செவ்வாய்*
அணிக்கொள் நால்தடந்தோள்* தெய்வம் அசுரரை என்றும்*
துணிக்கும் வல்லரட்டன்* உறைபொழில் திருமோகூர்*
நணித்து நம்முடை நல்லரண்* நாம் அடைந்தனமே. 10.1.9
3792@
நாமடைந்த நல்லரண்* நமக்கென்று நல்லமரர்*
தீமை செய்யும் வல்லசுரரை* அஞ்சிச் சென்றடைந்தால்*
காமரூபங் கொண்டு* எழுந்தளிப்பான் திருமோகூர்*
நாமமே நவின்று எண்ணுமின்* ஏத்துமின் நமர்காள். 10.1.10.
என்றென்றும் அன்புடன்
பாலா

5 மறுமொழிகள்:
Test comment !
மதுரைக்கு அருகில் இருக்கும் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவில் காண வேண்டிய ஒன்று. பதிவு அருமை - நன்றி
சீனா,
வருகைக்கு நன்றி.
There is another famous Narasimha swamy temple nearby thirumogoor...YOGA narshinga perumal kovil, Narasingampatti.Please try to write about that also.
ஒவ்வொரு முறை மதுரைக்குச் செல்லும் போதும் திருக்கூடலும் திருமோகூருக்கும் திருமாலிருஞ்சோலைக்கும் சென்று வருவது வழக்கம். ஜீன் 2007ல் சென்ற போதும் போய் காளமேகத்தைத் தரிசித்து வந்தேன். இந்தத் திருத்தலத்தில் கஜேந்திர மோட்சம் திருவிழா மிகச் சிறப்பாக நடக்கும். சிறு வயதில் சென்றிருக்கிறேன். இத்தனை முறை சென்றிருந்தும் தாயார் படி தாண்டா பத்தினி என்பது தெரியாமல் போயிற்று. தாயாரின் சன்னிதிக்குப் பின்புறமாக இருக்கும் சக்கரத்தாழ்வார் ஒரு பத்து பதினைந்து வருடமாக நிரம்பப் பிரபலம் அடைந்ததால் இன்று இந்தத் திருக்கோவிலும் கள்ளழகர் கோவில் அளவிற்கு பிரபலம் அடைந்துவிட்டது. மதுரையிலிருந்து திருமோகூர் செல்லும் வழியில் ஒத்தக்கடையிலிருந்து ஆனைமலை மேல் இருக்கும் நரசிங்கபெருமாள் சன்னிதிக்கும் சென்று வரலாம். இது வரை நான் சென்றதில்லை. திருவிளையாடல் புராணத்தின் படி யானை உருவில் வந்த அரக்கனை நரசிம்மாஸ்திரம் செலுத்தி சொக்கநாதப் பெருமான் கொன்றதாக வருவது தல புராணம். யானை உருவில் வந்த அரக்கன் ஆனைமலையாக நரசிம்மாஸ்திரம் நரசிங்கப் பெருமாள் ஆனது.
Post a Comment